செப்டம்பர் 26, 2011 க்கான தொகுப்பு

361 டிகிரி சிற்றிதழில் வெளியான எனது கவிதைகள்..

Posted: செப்டம்பர் 26, 2011 in பகுக்கப்படாதது

நான், ஒற்றை முலை அரசி. பெருமுலைகள் விதைகளாய் விழுந்து சூல் கொள்ளும் என் நிலம். நீராலமைந்த என் கொந்தளத்தில் விளையாடும் முலை தொலைத்த சிறுமீன்கள். இல்லாத என் முலைகளுக்கு உண்டு, ஓராயிரம் கதைகள் – நெகிழ்ந்தவழிந்த ஒரு கணத்தில் பூமி பிளந்ததென்றும் பின்னர் பொன் பூவாய் பூத்ததென்றும். சூல் கொண்ட என் நிலத்தில் விழுந்த முலைகள் எல்லாம் பொன்பூவாய் செழித்துயரும். எனினும், வருத்திக் கொண்டிருக்கிறது, என்னை முலைகளற்றவளாக்கும் இந்த மூன்றாவது காதல். ——— தண்டனைக்காலம் சாட்சிகளோ தேர்வுகளோ [...]