ஜூலை 3, 2011 க்கான தொகுப்பு

1. என் கவிதைகளில் முகமற்ற யாரோ ஒருவன் ரகசியமாக உலவிக் கொண்டிருப்பதாக நீ சொல்கிறாய். என் கவிதைகளில் உள்ள கடல்களில் படகுச் சவாரி மேற்கொள்ளும் உல்லாச பயணியாக இருக்கலாம். அல்லது மீனவனாகவும். 31வது பக்க கவிதையிலுள்ள மலை உச்சியில் வசிக்கும் ஆதி மனிதனாககூட இருக்கலாம். ஒருவேளை மதியகாட்சி டிக்கட் கிடைக்காமல் சும்மா எட்டிப் பார்க்க வந்திருப்பானோ? என் கவிதைகளின் தோற்றுவாய்கள் மிகவும் குறுகலாக இருப்பதாக அவன் முறையிடுகிறான். என் கவிதைகளில் வசிப்பது மிகவும் கடினமானதெனவும். என் கவிதைகளில் [...]