வேண்டாத முத்தத்தையும்
வல்லுறவின் தடத்தையும்
நீக்கும் போது
மழையிடம் இருக்கிறது
அறுவைசிகிச்சை நிபுணரின்
கத்தியையொத்த லாவகம்.
பகிர முடியாது அலையும்
முத்தங்களில் கொஞ்சம்
குளிர்ச்சியை சேர்க்கும் போது
மழையிடம் இருக்கிறது
கண்ணீரின் இனிமை..
மழையிடம் இருக்கிறது
கடவுளர் பரிமாறிக் கொண்ட
முத்தங்களின் ரகசியங்கள்.
மழையின் முடிவில்
எப்போதுமிருக்கிறது,
முத்தத்தின் மீதித் தனிமை…
(தினகரன் தீபாவளி மலரில் வெளியானது).
நல்ல கவிதை கவிதா.
கவிதை அவரவர் வாசிப்பிற்கான ஞானத்தை அவரவர்க்கு கொடுப்பது போல், மழையும் காலந் தொட்டுக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது, இது மழையின் இன்னொரு பார்வையில்பூத்த இனிய கவிதை. மிக்க வாழ்த்துக்கள்!!
விதயாசாகர்
excellent
ரொம்ப நல்லாயிருக்குது.
மழையின் முடிவில்
எப்போதுமிருக்கிறது,
முத்தத்தின் மீதித் தனிமை…
வரிகள் மனதை விட்டு நீங்க மறுக்கிறது.
நல்ல கவிதை