வேண்டாத முத்தத்தையும் வல்லுறவின் தடத்தையும் நீக்கும் போது மழையிடம் இருக்கிறது அறுவைசிகிச்சை நிபுணரின் கத்தியையொத்த லாவகம். பகிர முடியாது அலையும் முத்தங்களில் கொஞ்சம் குளிர்ச்சியை சேர்க்கும் போது மழையிடம் இருக்கிறது கண்ணீரின் இனிமை.. மழையிடம் இருக்கிறது கடவுளர் பரிமாறிக் கொண்ட முத்தங்களின் ரகசியங்கள். மழையின் முடிவில் எப்போதுமிருக்கிறது, முத்தத்தின் மீதித் தனிமை… (தினகரன் தீபாவளி மலரில் வெளியானது).