ஆகஸ்ட், 2010 க்கான தொகுப்பு

1. எனது உலகம் முத்தங்கள் அற்றது. தாயிடமிருந்து மகள் பெறும் முத்தமும் காதலியிடமிருந்து காதலன் பெறும் முத்தமும் யாரிடமிருந்தோ யாரோ பெறும் முத்தமும் கானல் நீராகி மின்னி மறையும் எனது சுடுவனத்தில். அன்றும் முத்தங்களை பரிமாறிக் கொள்ள முடியாத இடைவெளி. எனினும் முத்தத்துக்கு மிக அருகில் ஒரு உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருந்தேன். இலக்கிலாமல் அலைந்து கொண்டிருந்த எனது கோடிக் கணக்கான முத்தங்களில் ஒன்று காற்றின் தீவிரமான அசைவுகளின் எதோ ஒரு கணத்தில் உன் உதடுகள் மீது கவியும். அதே காற்றில் வீசப்பட்டு நிராகரிக்கபட்டோ அல்லது போய் சேராமலோ அலையும் வேறொரு முத்தம் என்னிடம் வந்து சேரும், முத்தத்தைவிட வசீகரமான ஒன்றாக. —— 2 [...]