செம்மொழி மாநாட்டுக்குச் செல்லும் பேறு பெற்ற பத்து லட்சம் மக்களில், ஐநூறு ஊடகவியலாளர்களில் நானும் ஒருத்தி. மாநாட்டு தொடக்கவிழாவை மட்டும் பார்த்துவிட்டு அடுத்த நாள் திரும்பிவிடுவதுதான் எனது அசல் திட்டம். அதை வெற்றிகரமாகவும் செயல்படுத்தினேன். ஆனால் விதி வலியது. தொலைக்காட்சி ரூபத்தில் அது வந்தது. சென்னை வந்து சேர்ந்த அடுத்த நாள் மாநாட்டுக் கவியரங்கம் சன் நியூஸில் நேரடி ஒளிபரப்பு. தமிழச்சி கவிதை வாசிக்கவிருந்ததால் அதை பார்க்க முடிவு செய்தேன். அவருக்கு முன்பே கவிதாயினி கயல்விழி கவிதை [...]