ஹமாம் சோப்பும் ஒரு கூடை அழுக்கும்.

Posted: நவம்பர் 16, 2009 in ஊடகம், போகிற போக்கில்...

நீண்ட காலத்துக்கு பிறகு இந்த பதிவு. உடல் அழுக்கை நீக்குவதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஹமாம் சோப்பு தயாரிப்பாளர்களின் உள்ள அழுக்கை பற்றியது.

தலித் முரசின் சமீபத்திய இதழில் ஊடகங்கள் பற்றி மிக சிறப்பான ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. மீனா மயில் எழுதியிருக்கிறார். ஒரு ஊடகவியலாளர் என்ற முறையில் கட்டுரையை படிக்க ஆரம்பித்த போதே எனக்கு பலத்த அதிர்ச்சி. அதில் அவர் ஹமாம் சோப் விளம்பரம் பற்றி குறிப்பிட்டிருந்தார். அந்த கட்டுரையின் ஹமாம் சோப்பு பகுதியை மட்டும் இங்கு குறிப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன்.

தற்பொழுது வெளிவந்து கொண்டிருக்கும் ஹமாம் சோப் விளம்பரக் எத்தனை பேரின் பார்வையை எட்டியது, கவனத்தை ஈர்த்தது, சுரணையை கிளறியது என்று தெரியவில்லை. ஒரு பார்ப்பன குடும்பம் அது. சிறுமியின் கைகளில் தடிப்பு தடிப்பாக சொறி வந்துவிட, இது எதனால் இருக்கும் என்று சிறுமியின் தாய் யோசிக்கிறார். ஆளாளுக்கு ஒரு காரணத்தை ஊகிக்கிறார்கள். வீட்டின் பணிப்பெண், “தெரு நாயோட விளையாடினா சொறி வரத்தான் செய்யும்” என்கிறார். கேரம் விலையாடிககொண்டிருக்கும் மாமனாரும் மாமியாரும் ஆளுக்கு ஒரு காரணத்தை சொல்கிறார்கள். “ஹமாம் இருக்க வீட்ல இந்த சந்தேகம் எல்லாம் எங்க” என்று முடிகிறது விளம்பரம். இதில் அந்த மாமனார் சொல்லும் காரணம்தான் அப்பட்டமான சாதிய வக்கிரத்தை வெளிப்படுத்துகிறது. கேரம் காயினை அடித்தபடி அவர் இப்படி சொல்கிறார்: “ஆட்டோவில் அந்த குழந்தைகளோட ஒட்டிண்டு போறாளே, அதான்.” இதை சொல்லும் போது அவர் கண்களிலும் உடல் மொழியிலும்வெளிப்படும் வன்மம் ஆண்டாண்டு காலமாக பார்ப்பனர்களிடம் நாம் பார்த்ததுதான்.”

இப்படி நீள்கிறது அந்த கட்டுரை. என்னுடைய அதிர்ச்சிக்கு காரணம், அந்த விளம்பரம் மட்டும் அல்ல எனது சுரணையும்தான். அந்த விளம்பரம் தொடர்ந்து பல்வேறு தொலைகாட்சிகள் மூலம் எனது பார்வையை எட்டியிருந்தாலும், எனது கவனத்தை ஈர்க்கவில்லை. எனது சுரணையை கிளறவில்லை. அதை இங்கே வெட்கத்தினுடேயே பதிவு செய்கிறேன்.  அந்த விளம்பரத்தில் அந்த மனிதர் சொல்வது ‘கண்ட குழந்தைகளையா அல்லது அந்த குழந்தைகளையா’ என்பதை தெளிவுப்படுத்திக் கொள்ள மீண்டும் அந்த விளம்பரத்தைப் பார்த்தேன். கண்ட குழந்தைகள் என்று சொன்னாலும் அது அப்பட்டமான சாதி வெறியே. ஆனால் அவர் ஒரு படி மேலே போய் மிகத் தெளிவாக அந்த குழந்தைகள் என்று தான் சொல்கிறார். மீனா மயில் எழுதியிருப்பது போல அருவருப்பாகத்தான் இருக்கிறது.

ஒரு சோப் விளம்பரத்தில் இவ்வளவு அப்பட்டமான சாதிய வெறியும் உள்ள அழுக்கும் வெளிப்படுமா என்பது ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.. தொடர்ந்து சிகப்பழகு கிறீம்களின் எல்லா விளம்பரங்களும் பெண்களையும் பொதுவாக கருப்பாக இருக்கும் மக்களையும் கூனிக் குறுக செய்வது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  இப்படிப்பட்ட விளம்பரங்களையும் பொருட்களையும் நாம் புறக்கணிக்காத வரையில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிட போவதில்லை. எப்போதும் பனியன் அணிந்த பகட்டான தோற்றம் கொண்ட மேல்சாதி பிரதிநிதி யாராவது நமக்கு விருப்பமில்லாவிட்டாலும் நமது வீடுகளுக்கு வந்து தலித் மற்றும் பிற ஒதுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கருத்துகளை உதிர்த்துக் கொண்டுதான் இருக்க போகிறார்கள். நாம் என்ன செய்ய போகிறோம்?


மறுமொழிகள்
  1. sundran says:

    Vanakam , Naanum antha adv parkum poduthu ellam sadthi very innum pogavillai endrum Tamilan innum shouranai aturanavanaka irukindran!Aiyoo tamilaa Vetcome Illai!

  2. பார்ப்பவன் குருடனாக படைப்பவன் எத்தனாகத்தானே இருப்பான்.

  3. reader says:

    ஹமாம் சோப்பைப் புறக்கணிப்போம்.

  4. usha says:

    It has been one of my favorite ads too for the way it portrays a middle class family.
    And I hate discriminations on the basis of caste and would have been the first to lead a boycott if this ad really voiced such distinctions:
    The old man says:
    auto le ATHANAI kozhandaigaloda otindu poraley. adaan.

    And the
    கண்களிலும் உடல் மொழியிலும்வெளிப்படும் வன்மம்

    is more on the concept of autos taking children like PUlimootai and

    I dont see and sathi veri there.

    I don’t deny the injustice that has been perpetrated onDalits for centuries but we are coimng out of it all now. Please let us not separate ourselves unnecessarily.

  5. padmahari says:

    //ஆனால் அவர் ஒரு படி மேலே போய் மிகத் தெளிவாக அந்த குழந்தைகள் என்று தான் சொல்கிறார்//

    அந்த விளம்பரத்தில் வரும் பெரியவர் ஆட்டோல “அத்தன” குழந்தைகளோட அப்படின்னுதாங்க சொல்றாரு. ஆனாலும் இதுல சாதி வெறி?! கண்டிப்பா அப்பட்டமா தெரியத்தாங்க செய்யுது! பகிர்வுக்கு நன்றி.

  6. rudhran says:

    this is atrocious. thanks for bringing this to everyone’s notice

  7. இரவுப் பறவை says:

    Welcome back ரொம்ப நாளுக்கப்புறம் வந்துருக்கீங்க……

    திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது………

  8. rudhran says:

    இதை நிஜம் என்று தெரிந்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
    இதற்குப்பின்னும் சில “ஜன்மங்கள்” சாதீயம் என்பதைப்பொய் என்றும் பார்ப்பனீயம் என்பது பழங்காலம் என்றும் வீரவசனமும் விதண்டாவாதமும் செய்வது குறித்து என்ன விவரிப்பது? இதன் தொடர்பாக வினவு தளத்தில் நடந்த விவாதங்களை முடிந்தால் படித்துப்பாருங்கள்.

  9. monikhaa & tharmini says:

    எனக்கும் அந்த விளம்பரத்தைப் பார்த்த போது மிகக் கோபம் ஏற்பட்டது.ஆனால் அதை எழுத்தில் பதிவிடவில்லையே என இப்போது இதைப்படிக்கையில் தோன்றியது.நானும் அதைப் பார்த்துத் திகைத்து எல்லோரும் சொறி வந்ததற்கச் சொன்ன காரணங்களை உற்றுக் கவனித்தேன்.அதிலே வேலைக்காரி தெரு நாய்களுடன் விளையாடிய காரணத்தைச் சொல்வதற்கும் ஆட்டோவில் பயணித்த காரணத்தை அந்த ஆண் சொல்வதற்குமான மனநிலையைக் கூட அதைப்பார்க்கும் போது யோசிப்பேன்.
    தர்மினி

  10. bmurali80 says:

    பரவீன் கொடுத்த சுட்டியில் ‘அத்தன பசங்க’ என்று தான் கேட்கிறது.

  11. underdog says:

    மூன்று முறை கேட்டேன் அத்தன பசங்க என்றுதான் சொல்கிறார்.இந்தப் பதிவு மற்றும் பின்னூட்டங்களைப் படித்த பின் யார் மனதுகளில் என்னென்ன வெறுப்புகள்/குப்பைகள் இருக்கின்றன என்பது தெரிந்தது. ஹிந்துஸ்தான் லீவர் பன்னாட்டு நிறுவனம், ஆனால் அது தயாரிக்கு பேர் அண்ட் லவ்லி கிரீம் போல் கிரீம்கள் இல்லையா. நடிகர் சூர்யா ஆண்க்களுக்கான க்ரீம் ஒன்றின் விளம்பரத்தில் நடித்து அது ஒளிபரப்பாகிறதே. அதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியாதோ?.

    ’தொடர்ந்து சிகப்பழகு கிறீம்களின் எல்லா விளம்பரங்களும் பெண்களையும் பொதுவாக கருப்பாக இருக்கும் மக்களையும் கூனிக் குறுக செய்வது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்’

    சிகப்பழகு க்ரீம் தயாரிக்கும் நிறுவனங்களில் தமிழ்நாட்டில் உள்ள தமிழருக்கு சொந்தமான நிறுவனமும் இருக்கிறது.அதையும் இந்த விளம்பரம் போல் சாதியை குறிப்பிட்டு அதன் உரிமையாளர்கள் யார் யார் என்று எழுதுவீர்களா. தலித் முரசு, ருதரன், வினவு, விடுதலை, தி.க, பெரியார் தி.க -இவர்களில் யாரேனும் ஒருவராவது அவ்வாறு எழுதுவார்களா. தைரியம் உண்டா.

  12. underdog says:

    இந்த விளம்பரம் வெளியாகும் தமிழ் தொலைக்காட்சி சானல்கள் எவை, அவை யார் யாருக்கெல்லாம் சொந்தம் .பார்பனர்கள் தமிழில் எத்தனை சானல்களை நடத்துகிறார்கள், பார்பனர் அல்லாதோர் எத்தனை சானல்களை நடத்துகிறார்கள். தமிழ்நாட்டில் லீவர் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் முக்கிய விநியோகஸ்தர்கள் யார்/எந்த நிறுவனங்கள். கொஞ்சம் யோசியுங்கள் தமிழ் நாட்டில் வணிகமும்,தொழிலும் பார்பனர்கையில்லுள்ளதா இல்லை பார்பனர் அல்லாத சாதியினர் கையிலுள்ளதா.

  13. திருவாளர் அண்டர்டாக், ஹமாம் விளம்பரத்தை குறை சொல்வதால் மற்ற சிகப்பழகு க்ரீம்களுக்கு அங்கீகாரம் வழங்குவது என்பது அர்த்தம் அல்ல. கொஞ்சம் என்னுடைய பழைய பிளாக்குகளை படித்திருந்தால் சிகப்பழகு க்ரீமகள் பற்றியும் பெண்களை போகப்பொருளாக காட்டுவது பற்றியும் நான் எழுதியிருப்பதை நீங்கள் படித்திருப்பீர்கள். தவறு யார் செய்தாலும் அதை சுட்டிக்காட்டும் நோக்கத்துடன் பலர் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
    உங்களைப்போன்றவர்களைதான் உண்மைகள் சுடும்.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s