உன் புனிதத்தின் பிம்பங்களை உடைத்தெறியும்
என் மௌனம்
மிகப் புதிரானது.
என் மௌனங்களின் காற்புள்ளியில் தொக்கி நிற்கும்
உன் கேள்விகளுக்கு
என்னிடம் விடைகளோ தீர்வுகளோ இல்லை.
உன் வன்முறைகளின் மிச்சங்களிலிருந்துதான்
எனது மௌனம்
தனது தற்காப்பு ஆயுதங்களை
உருவாக்கிக் கொள்கிறது.
எனினும் என் மௌனம்
அதி வலிமையானது.
என் மௌனம் சாத்தியப்படுத்தியிருக்கிறது,
வலுவிழக்கும் உன் அதிகாரங்களையும்
விரியும் என் எல்லைகளையும்.
என் மௌனம் சாத்தியப்படுத்தியிருக்கிறது,
என் விடுதலையை.
உன் முயற்சிகளையும் மீறி
என் மௌனம்
சாத்தியப்படுத்தியிருக்கிறது
என்னை.
கவிதை அழகா இருக்கு! வாழ்த்துக்கள்!
நிறைய எழுதுங்கள்!
//வலுவிழக்கும் உன் அதிகாரங்களையும்
விரியும் என் எல்லைகளையும்.
என் மௌனம் சாத்தியப்படுத்தியிருக்கிறது,//
மெளனம் சாத்தியப்படுத்திய விசயங்கள் அழகாய் சொல்லியிருக்கீங்க
வாழ்த்துக்கள் !
மௌனத்தின் ஆழ்மையில் வெளிவரும் உங்கள் நீங்கள் சரியே
யாழன் ஆதி
மிக்க நன்றி.. தொடர்ந்து எழுதுகிறேன்
வாய் பேச்சில் எந்தப் பயனுமில்லையெனில் மௌனம்தான் சிறந்த ஆயுதம்…அழகாக சொல்லியிருக்கீங்க!!!
Hello – just wanted to say that you are absolutely right!
Great post, thanx.